கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,271 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தத்தில் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
212 குடும்பங்களைச் சேர்ந்த 700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
0 Comments