நாளை (01) முதல் அனைத்து வகை கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படும் என கையடக்க தொலைபேசி விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சங்கத்தின் தலைவர் சமித் செனரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாளை முதல் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் VAT 18 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வால் மொபைல் சந்தை சுமார் 50 சதவீதம் வரை சுருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாளை முதல் 100,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி 135,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
0 Comments